சென்னை:
பிரபல குணச்சித்திர நடிகரும் முன்னாள் இசையமைப்பாளருமான மதன் பாப் இன்று (வயது 71) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
அவர் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதலில் இசையமைப்பாளராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய மதன் பாப், பின்னர் திரைத்துறையில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் திகழ்ந்து ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தவர்.
அவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் அவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது மறைவு திரையுலகத்தில் பெரும் இரங்கலை ஏற்படுத்தியுள்ளது. பல திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதன் பாப் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் அருள்புரியட்டும்.
நன்றி