சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பேருந்து சேவைகள் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னையின் 32 பேருந்து நிலையங்களில் இருந்து 650-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு பேருந்தும் ஊழியர் இல்லாமல் நிறுத்தப்படவில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் சீராக செயல்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும், மக்கள் பயணத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் கவனிக்கப்படுவதாகவும் துறை வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு தகவல்:
பொதுமக்கள் எந்தவித கவலையும் இல்லாமல், வழக்கம்போல் பேருந்துகளை பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை உறுதி அளித்துள்ளது.
நன்றி