ரஷ்ய போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ரோமன் ஸ்டாரோவாய் (வயது 53), திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.
பதவி நீக்கம் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சார்பில் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எதுவும் தெரிவிக்க மறுத்தார். எனினும், மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ விமான நிலையம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையம் ஆகிய இடங்களில் உக்ரைனிய டிரோன் தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலைமைக்கு அமைச்சர் ஸ்டாரோவாய் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், ஸ்டாரோவாயை பதவி நீக்கம் செய்து, அவரது பதிலாக ஆண்ட்ரி நிகிடினை தற்காலிக போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமித்தார்.
அதிகாரபூர்வ பதவி நீக்க அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள், ஸ்டாரோவாய் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் ரஷ்ய அரசியல் வட்டாரங்களிலும், சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன? எந்த மன அழுத்தம் அல்லது விசாரணை காரணமா என்பதற்கான தெளிவான காரணம் தற்போது வெளியாகவில்லை.
ஆனால், அரசின் திடீர் நடவடிக்கை மற்றும் பதவி இழப்பின் தாக்கம் ஒரு உயர் அதிகாரியின் உயிரை குடித்துள்ளது என்பது நிச்சயமென கூறப்படுகிறது.
நன்றி