மகளிர் அணிகளுக்கான 10வது ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, 2026 ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்து இந்தத் தொடரை நடத்தவுள்ளது. போட்டிக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
பிரிவுகள் மற்றும் போட்டி வடிவம்
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 2 பிரிவுகளாக, தலா 6 அணிகள் அடங்குமாறு பிரிக்கப்படுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில், ஒவ்வொரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
முதலாம் பிரிவு:
- ஆஸ்திரேலியா
- தென் ஆப்ரிக்கா
- இந்தியா
- பாகிஸ்தான்
- தகுதிச் சுற்று மூலம் தெரிவாகும் 2 அணிகள்
இரண்டாம் பிரிவு:
- இங்கிலாந்து (போட்டி நடத்தும் நாட்டு அணி)
- வெஸ்ட் இண்டீஸ்
- நியூசிலாந்து (நடப்பு சாம்பியன்)
- இலங்கை
- தகுதிச் சுற்று மூலம் தெரிவாகும் 2 அணிகள்
போட்டி தொடக்கம் மற்றும் முக்கிய தேதிகள்
- தொடக்க விழா மற்றும் முதல் போட்டி:
ஜூன் 12, 2026 – இங்கிலாந்து vs இலங்கை, இடம்: எட்ஜ்பாஸ்டன் - முக்கியமான இந்தியா vs பாகிஸ்தான் போட்டி:
ஜூன் 14, இடம்: எட்ஜ்பாஸ்டன் - அரையிறுதி ஆட்டங்கள்:
ஜூன் 30 மற்றும் ஜூலை 2, இடம்: கென்னிங்டன் - இறுதி ஆட்டம்:
ஜூலை 5, இடம்: லண்டன் லார்ட்ஸ் மைதானம்
இந்த உலகக் கோப்பை, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், ரசிகர்களின் வரவேற்பிற்கும் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் அணி, கடந்த தொடர்களில் அனுபவம் பெற்றுள்ளதுடன், இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும் என உறுதி அளிக்கின்றது.
நன்றி