யாழ்ப்பாணம் – 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானன. இதில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை பெருமைமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், அதில் 120 மாணவிகள் 9A பெறுவதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இது மிகுந்த பெருமைக்குரிய விடயமாகும்.
மேலும்,
- 36 மாணவிகள் 8A பெற்றுள்ளனர்
- 25 மாணவிகள் 7A பெற்றுள்ளனர்
இத்தகவலை பாடசாலை அதிபர் திருமதி கிரேஸ் தேவதயாளினி தேவராஜா தெரிவித்துள்ளார். அனைத்து மாணவிகளும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேம்படி பாடசாலை, தனித்துவம் வாய்ந்த கல்வி தரம், கட்டுப்பாடான கல்விச்சுற்றுச்சூழல் மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்களின் வழிகாட்டலால் தொடர்ந்து உயர் பெறுபேறுகளைப் பதிவு செய்து வருகின்றது. இம்முறை பெறுபேறு, பாடசாலை மட்டுமின்றி யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றிலும் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
மாணவிகளுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
நன்றி