மலேசியா விசா இல்லாத பயணத்தை இலங்கையர்களுக்கு அனுமதிக்க பரிசீலனை

Spread the love

மலேசியா, இலங்கையர்கள் விசா இல்லாத பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டத்தை கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் ஆசிய மற்றும் ஆபிரிக்காவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வு குழுவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை ஊடகங்களின் பிரதிநிதிகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2024 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு பயணம் செய்த இலங்கையர்களின் எண்ணிக்கை 122 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வேகமான வளர்ச்சியை தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த விசா விலக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை வகுக்கப்படுகிறது என்று மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டினார்.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *