திருச்சி ஆர்டிஓ மற்றும் மனைவி தற்கொலை: காதல் விவகாரத்தில் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணம்

Spread the love

திருச்சி, ஜூலை 5:
திருச்சி ஆர்டிஓ பணியாற்றிய சுப்பிரமணி (56) மற்றும் அவரது மனைவி பிரமிளா (55) தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோடு, கலைவாணி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவ்வினவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஆதித்யா (23), புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயின்று வருகிறார்.

தற்கொலைக்கு முன் நடந்தது என்ன?
நேற்று அதிகாலை 4 மணியளவில், சுப்பிரமணியும், அவரது மனைவியும், தங்கள் வீட்டிலிருந்து டூவீலரில் புறப்பட்டு, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வகுரம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றுள்ளனர். அங்கு டூவீலரை நிறுத்திய இருவரும், அருகிலுள்ள தண்டவாள பகுதிக்கு சென்று, வருவதாக இருந்த சரக்கு ரயிலில் தங்கள் தலையை வைத்து படுத்து தற்கொலை செய்துகொண்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

இச்சம்பவத்தை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டதும், நாமக்கல் ரயில்வே நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு காரணம்:
முதற்கட்ட விசாரணையின்படி, சுப்பிரமணியும் பிரமிளாவும் தங்கள் பிஇ முடித்த மகளுக்கு மணமுடிக்க முயற்சி செய்துள்ளனர். பல இடங்களில் மண வரன்களை பார்த்தும், மகள் யாரையும் விரும்பவில்லை என கூறியுள்ளார். மேலும், அவர் வேறு ஒரு இளைஞரை காதலித்து வருகிறார் என்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கடந்த இரவு கடும் வாதமாக மாறியதையடுத்து, தன்னிலை இழந்த தம்பதியர் தற்கொலைக்கு முடிவெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *