யாழ்ப்பாணம், ஜூலை 5:
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒரு ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், 30க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஒலி நெருக்கடிக்குரிய அளவிற்கு அதிகமாக இருந்ததால், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில், அரசாங்க அதிபர் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு, உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார், அவ்விடத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பெருக்கிகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அலங்கார நிகழ்வுகளின் போது கூட ஒலி மாசுபாடை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள், சமூக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் ஒரு முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுகிறது.
நன்றி