சென்னை – சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – விழுப்புரம் மின் ரயில் வழித்தடத்தில் மொத்தம் 12 மின்சார ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மாற்றங்கள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
- சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் தற்போது சிங்கப்பெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்.
- காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே மட்டுமே இயக்கப்பட்டு, மற்ற பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து பயணிகளுக்கான அறிவுரை:
பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றப்பட்ட ரயில் நேரங்களுக்கு ஏற்ப முறைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த மாற்றங்கள் இடைக்காலமாகும் என்பதை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் வழமைபோல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி